முதல் பயணம்
இன்று(23/12/2022) மாலை 06.00 காங்கேசன்துறையில்(Kankesanthurai)
இருந்து புகையிரதத்தில் ஏறினேன் கொழும்பு நோக்கிய பயணத்துக்காக புகையிரதத்தில் இருக்கைகளுக்காக மக்கள் அடிபட்ட வண்ணம் ஒரு பக்கம் இருந்தார்கள் அதிலும் நான் 3 இருக்கைகளினை எமக்காக பிடித்து கொண்டேன் என்னுடன் சேர்த்து 2 இருக்கைகளுடன் கிளிநொச்சி வரை பயணம் செய்தேன் கிளிநொச்சியில் இருவரை அழைத்துக்கொண்டு நாங்கள் 3 பேரும் கொழும்பு நோக்கிப்பயணம் செய்தோம் கொழும்பில் காலை 04.30 மணியளவில் இறங்கினோம் பின்னர் ஆடைகளினை மாற்றிவிட்டு ஸ்ரீ பொன்னம்பலம் வனேசர் கோவில் (Sri Ponambalam Vanesar Kovil) சென்றோம் அங்கு பூசையில் கலந்து விட்டு காலை உணவினை சாப்பிட்டோம். பின்னர் 08.45 மணியளவில் அங்கிருந்து முச்சக்கரவண்டி மூலம் பம்பலபிட்டிய சென்று அங்கிருந்து பேரூந்தில் காலை 10.00 மணியளவில் தெகிவளை மிருகக்காட்சிச் சாலை சென்றோம் அங்கு ஊர்வன, நீர்வாழ் ,தரைவாழ் உயிரினங்களினை பார்வையிட்டோம்.
பின்னர் காலிமுகத்திடல்(Galle Face Green) சென்றோம். அங்கு மதிய உணவினை அருந்தி விட்டு அங்கிருந்து போர்ட்சிட்டி(fort city) சென்றோம் அங்கு அதன் வடிவமைப்புகளினை பார்த்து விட்டு பின்பு அங்கிருந்து கொழும்பு கோட்டை (Pettah) சென்று அங்குள்ள கடைகளில் எமக்கு தேவையான உடமைகளினை வாங்கிக்கொண்டு கொழும்பு புகையிரத நிலையம் சென்று அங்கிருந்து இரவு 08.00 மணியளவில் காட்டன் நோக்கி எமது பயணம் ஆரம்பித்தது (புகையிரதத்தில் இருக்கைகள் இன்றி நின்ற பயணத்தில் இரவு 08.00PM மணியில் இருந்து காலை 02.00AM மணிவரை எமது பயணத்தினை மேற்கொண்டோம்


மிகவும் அருமையாக உள்ளது உங்களது பயணமும் உங்களது வலைத்தளமும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு நன்றிகள் தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்
ReplyDelete